வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
அருணகிரிநாதப்பெருமான் கோவையில் உள்ள பிரசத்தி பெற்ற பேரூர் ஸ்தல முருகப்பெருமானிடம்
என்கின்ற திருப்புகழில் ஒரு வேண்டுகோள் ஒன்றை
மனம் உறுகி வைக்கின்றார். அது என்னவென்றால்:
“பேரூரில் வாழும் பெருமிதம் உடைய கந்தக் கடவுளே! தீராத பிறவிப்பிணி தீரும் பொருட்டு, உயிரை உணர்ந்து கொள்ளும் ஞானத்தை எனக்கு உபதேசித்து அருள்புரிய வேண்டும் என்பதேயாகும்”.
உலகிலே உள்ள எல்லா உயிர்களுக்கும் எப்போதும் நீங்காமல் தொல்லைப் படுத்தும் நோய்கள் மூன்று உள்ளது.இந்த மூன்று நோய்களின்றும் தப்பி உயர்ந்தவர் மிகச் சிலரே. அந்நோய்கள் ” பசி, காமம், பிறவி” என்பனவாகும்.
பசி – உடம்பைப் பற்றியது.
காமம் – உள்ளத்தைப் பற்றியது.
பிறவி – உயிரைப் பற்றியது.
உடம்பு, உள்ளம், உயிர் இவைகளைப் பற்றி அறிந்து பின் தெளிந்தால் தீராப்பிணி தீரும் என்கிறார் அருணகிரியார்.எனவே நாம் படிக்கும் கல்விக்கு சற்றும் குறைவில்லாமல் இந்த மூன்றைப் பற்றிய அறிவை இறை அருளால் பெற்று , இவ்வுலகில் அமைதியாக வாழ்வதோடு தீராப் பிணியில் ( முடிவே இல்லாத பிறவியில்) இருந்து நாம் விடுபட முடியும்.
ஞான தண்டாயுதபாணி சுவாமி நமக்கு இந்தத் தீராப் பிணி தீர அருள்புரிய பிரார்த்திப்போமாக.
ஓம்சரவணபவ.