வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா!
கந்தரலங்காரத்தின் முதல் பாட்டிலேயே அருணகிரிநாதர் தான் முருகப்பெருமானின் அருள் பெற்றதை வியந்து பாடுகின்றார்.
“பேற்றைத் தவஞ்சற்று மில்லாத
வென்னைப்ர பஞ்சமென்னுஞ்
சேற்றைக் கழிய வழிவிட்ட வா! செஞ்
சடாடவிமேல்
ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை
யம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன்
க்ருபாகரனே
பொருள்:-
சிவந்த சடைக் காட்டின் மேலே கங்கை ஆற்றையும், பாம்பையும் , கொன்றையையும் , தும்பை மலரையும் , பிறைச் சந்திரனையும் சூடியுள்ள சிவபெருமானது பிள்ளையாகிய கருணைக்கு இருப்பிடமான முருகப்பெருமான்,
நல்ல பாக்கியம், தவ ஒழுக்கம் இவை கொஞ்சமேனும் இல்லாத என்னை உலகமாயை என்னும் சேற்றைக் தாண்டிச் செல்ல வழி காட்டிய திருவருள் வியக்கத் தக்கதே.
ஓம் சரவணபவ