திருப்புகழ்ச் சிறப்புப் பாயிரம்

“ஞானம் பெறலாம் நலம் பெறலாம் எந்நாளும்

வானம் அரசாள் வரம்  பெறலாம் மோனவீ

டேறலாம், யானைக் கிளையான் திருப்புகழைக்

கூரினார்க் காமேஇக் கூறு”

*********************************

“திருப்புகழைக் கற்கத் திருப்புகழைக் கேட்கத்

திருப்புகழை நித்தஞ் செபிக்கத் திருப்புகழை

அர்ச்சிக்க முத்தியெளி தாகுமே, கூற்றைவென்று

கெர்ச்சிக்கலாமே கெடீ”.

***********************************

இப்பேற்பட்ட ஈடு இணையற்ற சிறப்பு மிக்க முத்திப்பேற்றினை அழிவு இல்லா ஜீவாத்துமாக்களுக்கு உய்வு அளிக்கக்கூடிய திருப்புகழை சந்தத்தால் பாடிய “சந்தமுனி”, “வாக்கிற்கு அருணகிரி”, “கருணைக்கு அருணகிரி”, என்றெல்லாம் போற்றப்படும் அருணகிரிநாதப்பெருமானுக்கு திருவண்ணாமலையில், அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் (கிரிவலப்பாதை, செங்கம் சாலை சந்திப்பு) மணிமண்டபம் மிகவும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு தினசரி  பூஜைகள் நடைபெற்று வருவதுடன், ஒவ்வொரு மாதமும் வரும் மூல நட்சத்திரத்தன்று  அருணகிரிநாதருக்கு அபிஷேகம் நடைபெற்றுவருகிறது. அருணகிரிநாதரின் ஜெயந்தி விழா ஆனி மாதத்தில் வரும் மூல நட்சத்திரத்தன்று மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும்,சென்னை / சிவகாசி / புது டெல்லி / மும்பை / பெங்களூர் மற்றும் பிற மாவட்டங்கள் / மாநிலங்களிலிருந்து திருப்புகழ் அன்பர்கள் இங்கு வந்து “திருப்புகழ் இசை நிகழ்ச்சிகளையும் / பரத நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தியவண்ணம் இருக்கிறார்கள். வெளி நாட்டிலிருந்தும் முருகன் அடியார்கள் இங்கு வந்து அருள் பெற்றுச் செல்கிறார்கள். அருளாளர் அருணகிரிநாதர் அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவரும் இம் மணிமண்டபத்தை தங்களின்  உயிரினும் மேலாக பாவித்து பராமரித்து வருவதுடன், ஜீவாத்துமாக்கள் ஆன்ம நலம் பெரும் வகையில் சீரிய முறையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

முருகன் அடியார்களும் / திருப்புகழ் அன்பர்களும், மணிமண்டபத்தில் எழுந்தருளியுள்ள அருணகிரிநாதப்பெருமானை தரிசித்து ஆன்ம நலம் பெற வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *